தெரிந்த தளம் தெரியாத விஷயங்கள்..
HTML அறிவோம்...(4)
இது கடந்த சில பதிவுகளின் தொடர்ச்சி.
எனவே கடந்தப் பதிவுகளை நீங்கள் காண விரும்பினால்........
இன்றைய பதிவில், நகரும் உங்களது வார்த்தைகளை Button -களை பயன்படுத்தி, எவ்வாறு "control" செய்வது என்பது பற்றிப் பார்க்கலாம்.
அதற்கு முன், Text button -களை உருவாக்குவது எப்படி என்பது பற்றிப் பார்க்கலாம்.
TEXT BUTTON -களை உருவாகுவது மிக எளிது.
உங்களது button -க்கு நீங்கள் தேர்வு செய்கின்ற பெயருக்கு முன்னும் பின்னும் button என்பதை சேர்க்க வேண்டும்.
நான் ஏற்கனவே கடந்த பதிவுகளில் கூறியபடி, நீங்கள் உருவாக்கும் HTML code ஆனது < > இந்த இரு அடையாளங்களுக்கு மத்தியில் ஆரம்பத்திலும்,
முடியும் வரிகள் < >இந்த இரு அடையாளங்களுக்கு மத்தியில் / இந்த குறியீட்டுடன் அமைய வேண்டும்.
எனவே ஒரு text Button -ஐ உருவாக்க சரியான code ஆனது,
<button>உங்களது வார்த்தை</button>
என்பதாகும்.
இதற்கான பிரதிபலிப்பு
இது Button -க்குரிய செயல் என்பதால், type="button" என்பதை உடன் இணைக்க வேண்டும்.
எடுத்துக்காட்டு
<button type="button" >உங்களது வார்த்தை</button>
இதற்கான பிரதிபலிப்பு
இந்த Button -ஐ நீங்கள் நகர்த்த விரும்பினால்,
எடுத்துக்காட்டு
<marquee><button type="button">உங்களது வார்த்தை</button></marquee>
இதற்கான பிரதிபலிப்பு
Button -க்குள் உங்களது வார்த்தையை நீங்கள் நகர்த்த விரும்பினால்,
எடுத்துக்காட்டு
<button type="button" ><marquee>உங்களது வார்த்தை</marquee></button>
இதற்கான பிரதிபலிப்பு
இனி, இது போன்ற button -ஐ பயன்படுத்தி, நகரும் உங்களது வார்த்தைகளை எவ்வாறு கட்டுப்படுத்துவது எனபது பற்றிப் பார்ப்போம்.
உங்களது நகரும் வார்த்தையானது கீழ்கண்டவாறு இருக்கும் போது,
எடுத்துக்காட்டு
<marquee behavior="scroll">உங்களது வார்த்தை</marquee>
இதற்கான பிரதிபலிப்பு
உங்களது வார்த்தையை control செய்கின்ற button ஆனது செய்ய வேண்டிய செயலை கீழ்க் கண்டவாறு குறிப்பிட வேண்டும்.
click செய்யப் படும்போது element ஆனது, stop செயலைப் புரிய வேண்டும்.
இதை ஆங்கிலத்தில் அதற்குரிய HTML code -ஆக எழுத்தும் போது,
onclick="document.getElement.stop();"
இங்கே stop என்பது Button அழுத்தப்படும் போது, செயல் நிறுத்தப்படவேண்டும் என்பதைக் குறிக்கிறது.
இது Button -க்குரிய செயல் என்பதால், type="button" என்பதை உடன் இணைக்க வேண்டும். Button -க்கு நீங்கள் வைக்கும் பெயரைக் குறிப்பிட value="Button பெயர்" என்பதை இணைக்க வேண்டும்.
எனவே,
onclick="document.getElement.stop();" type="button" value="Button பெயர்"
உங்களது வார்த்தையின் நகர்விற்கு நாம் கொடுக்கும் INPUT இது என்பதால்,
input onclick="document.getElement.stop();" type="button" value="Button பெயர்"
இவை அனைத்தையும் HTML code -ற்கான அடைப்புக் குறியீடிற்குள் இட வேண்டும்.
<input onclick="document.getElement.stop();" type="button" value="Button பெயர்" />
இங்கே உங்களது வார்த்தையை control செய்ய, உங்களது நகரும் வார்த்தைக்கும், உங்களது வார்த்தையை control செய்கின்ற Button -க்கும் இடையே ஒரு தொடர்பை ஏற்படுத்த வேண்டியது அவசியமாகிறது.
இதற்காக id -ஐ பயன்படுத்தலாம்.
உங்களது நகரும் வார்த்தையானது..
<marquee behavior="scroll" id="ikito">உங்களது வார்த்தை</marquee>
உங்களது Button -ஆனது..
<input onclick="document.getElementById('ikito').stop();" type="button" value="Button பெயர்" />
இங்கே உங்களது நகரும் வார்த்தைக்கும், Button -க்கும் இடையேயான தொடர்பை id="ikito" என்பது ஏற்படுத்துகிறது.
நீங்கள் விரும்பினால், உங்களது id -யின் பெயரை மாற்றி அமைக்கலாம்.
இப்போது மேற்கண்ட code -களை பயன்படுத்த,
எடுத்துக்காட்டு
<marquee behavior="scroll" id="ikito">உங்களது வார்த்தை</marquee>
<input onclick="document.getElementById('ikito').stop();" type="button" value="Button பெயர்" />
இதற்கான பிரதிபலிப்பு
மேற்காணும் button -ஐ click செய்துப் பாருங்கள்.
உங்களது பட்டன் அழுத்தப் படுகின்ற போது, நகரும் உங்களது வார்த்தையானது நின்று விடும்.
நிறுத்தப் படுகின்ற உங்களது வார்த்தையை மீண்டும் நகர வைக்க..
stop என்பதற்கு பதிலாக start என எழுதப் பட்ட code -ஐ உடன் இணைக்க வேண்டும்.
எடுத்துக்காட்டு
<input onclick="document.getElementById('tamil').start();" type="button" value="Button பெயர்" />
இப்போது முயற்சித்துப் பாருங்கள்.
இவ்வற்றை scrolling மட்டுமல்லாது, Bouncing, Jumping போன்ற அனைத்து செயல்களிலும் பயன்படுத்தமுடியும்.
முயற்சசித்துப்பாருங்கள்.....
இவை சாத்தியமாகுமா என தோன்றுகிறதா?
நமது தளத்தின் வலது புறம் கொடுக்கப்பட்டுள்ள HTML code Tester -ல் உங்களது code -களை இட்டுப் பாருங்கள்.
உங்களது code -களுக்கு விடை அதன் கீழ்ப் புறம் பிரதிபலிக்கும்..
இதற்கான தொடர்ச்சியை அடுத்து வரும் பதிவில், பார்க்கலாம். நன்றி...
இது உங்களுக்கு பிடித்திருக்கிறதா?




0 comments:
Post a Comment